December 8, 2025, 1:36 AM
23.5 C
Chennai

குபேரா – எப்படி இருக்கிறது???

குபேரா நேற்று வரை வருமா வராதா என எதிர்பார்த்து கடைசியில் படத்தின் நேரத்தை குறைத்து சென்சாரில் வெட்டு குத்து வாங்கி இன்று தமிழ் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகி படம் பெரும் விருவிருப்புடன் நகர்ந்து  தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் திருப்தி படுத்தி வருகிறது .

மும்பையில் உள்ள தாராவியை மையமாக கொண்டு அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், கதைப்படி பிச்சைக்காரனாக நடித்துள்ள தனுஷ், இந்த சமூக அவலங்களை நோக்கி சாடும் பல அதிரடியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் அழுத்தம் நிறைந்த கதை.அழுக்கு படிந்த உடையும் கையில் குட்டி நாயுமாக பிச்சைக்காரனின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் தனுஷ்.

சாப்பாடுக்காக கையேந்தும் ஒவ்வொரு இடங்களிலும் அவர் அனுதாபம் அள்ளுகிறார். மீண்டும் நடிப்பில் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.

சோக முகமும் கண்ணீருமாக ராஷ்மிகா வித்யாசமான நடிப்பை கொட்டியுள்ளார். தனுசுடன் சேர்ந்து குப்பை மேட்டில் சுற்றித்திரிந்து தானும் நடிப்பில் கைதேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். இதுவரை பார்க்காத ரஷ்மிகாவை ரசிகர்கள் பார்ப்பது உறுதி.

சூழ்நிலைக்காக கொள்ளை கும்பலுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பு யதார்த்தம். கண்கள் மூலமாகவே வசனங்களை பேசியிருக்கிறார்.

ஜிம் சர்ப்பின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல வில்லன் கிடைத்துள்ளார். பிச்சைக்காரராக வரும் பாக்கியராஜ், சுனைனா, நாசர், தலிப் தஹில் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டம் தருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள படம் குபேரா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள குபேரா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ள சென்சார் போர்டு, 19 இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இருப்பதாக சொல்லி கட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

குபேரா அப்படி என்ன கதை…

மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற தொழில் அதிபர் ஜிம் சர்ப் நினைக்கிறார்.

இதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவின் உதவியை நாடுகிறார்.சட்டவிரோத பரிவர்த்தனைக்காக கல்வி அறிவு இல்லாத தனுஷ் உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை நாகார்ஜுனா தேர்வு செய்கிறார்.

அவர்கள் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்.
ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்த பின்பும் சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இதற்கிடையில் தனுசை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படும்போது அவர் தப்பித்து விடுகிறார். எதிர்பாராத விதமாக பண பரிவர்த்தனையும் தடைபடுகிறது.
தனுஷ் உயிரோடு கிடைத்தால்தான் பணப்பரிவர்த்தனை முழுமை அடையும் என்பதால் அவரைத் தேடி நாகார்ஜுனா தலைமையில் குழுக்களாக பிரிந்து தேடுகிறார்கள்.

இதற்கிடையில் ஒரு ரெயில் நிலையத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராஷ்மிகாவை, தனுஷ் சந்திக்கிறார். அதன் பிறகு ராஷ்மிகாவுடன் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தனுஷ் தள்ளப்படுகிறார்.

தனுஷ் என்ன ஆனார்? கொள்ளை கும்பலின் கையில் அவர் அகப்பட்டாரா? ராஷ்மிகாவின் நிலைமை என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

யாருமே யூகிக்க முடியாத கதையை, கடைசி வரை பரபரப்பு குறையாமல் காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா. கிளைமேக்ஸ் எதிர்பாராதது.படம் பார்க்கலாம்.தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தனித்தனியாக எடுக்கப்பட்ட படம் இது.

1000781264 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories