railway news - 2026

செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதமும் மதுரையை தவிர்க்குது!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் மதுரை
railway news - 2026
#image_title

செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை போகனும் என நினைக்கிறீங்களா இத படிங்க.

திங்கட்கிழமை முதல் செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மீண்டும் மாற்றுப்பாதையில் விருதுநகர் மானாமதுரை வழி இயங்கவுள்ளது .

புதன்கிழமை மட்டுமே இந்த மாதத்தில் மதுரை வழியாக செல்லும் .வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் மாற்று பாதையிலேயே இயங்க உள்ளது

திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு என ஆறு நாட்களும் இந்த ரயில் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை தேவகோட்டை ரோடு காரைக்குடி புதுக்கோட்டை கீரனூர் ஆகிய கூடுதல் நிலையங்களில் நின்று திருச்சி வழியாக மயிலாடுதுறை நோக்கி செல்லும்

மாற்றுப்பாதையில் அனைத்து நிலையங்களிலும் இந்த ரயிலுக்கு டிக்கெட் கிடைக்கும் . பகல் நேரத்தில் திருச்சி தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

மதுரை திண்டுக்கல் மார்க்கமாக இந்த ரயில் புதன்கிழமை மட்டுமே செல்லும் . கள்ளிக்குடி முதல் கொளத்தூர் வரை உள்ள நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.