மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள்

nirmala seetharaman - 2026

மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும், இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1 ஞாயிறு  இன்று காலை 11  மணிக்கு தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் தெரிவிகப்பட்ட முக்க்ய அம்சங்கள்…

* பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. சீர்த்திருத்தங்களால் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

* பாஜ அரசின் நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

* நீண்ட கால தொழில்முதலீட்டு திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம்.

* வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.

* மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

முக்கிய கடமைகள்

  • 3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.
  • அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்.
  • எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
  • இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.
  • அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.
  • நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.

மத்திய பட்ஜெட் 2026-27

  • மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 
  • இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது.
  • அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர்.
  • சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது 

மத்திய பட்ஜெட் – சில அறிவிப்புகள்

  • நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உலகத்தரத்தில் பயிற்சி.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
  • 2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.
  • சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.
  • மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
  • வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலையான வளர்ச்சி

  • தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.
  • கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாகத்தில் நிலையானதாக உள்ளது.
  • பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
  • உற்பத்தி துறையில் அக்கறை, வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிப்பு
  • இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
  • பொருளாதார வளர்ச்சி சதவீதம் 7ஆக எதிர்பார்க்கப்படுகிறது.
  • வறுமை பெரும் அளவு குறைப்பு
  • உயிரி மருத்துவத்துறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை!

  • ₹4 லட்சம் வரை – 0 வரி
  • ₹4-₹8 லட்சம் வரை – 5% வரி
  • ₹8-₹12 லட்சம் வரை – 10% வரி
  • ₹12-₹16 லட்சம் வரை – 15% வரி
  • ₹16-₹20 லட்சம் வரை – 20% வரி
  • ₹20-₹24 லட்சம் வரை – 25% வரி
  • ₹24 லட்சத்துக்கும் மேல் – 30% வரி

எதற்கெல்லாம் வரி விலக்கு?

  • தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை 
  • விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு.
  • தனி நபர்கள் வழக்கம் போல் ஜுலை 31ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
  • தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
  • வரி சார்ந்த குற்றங்களுக்கான தண்டனைகளில் தளர்வு; வரி சார்ந்த அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு.
  • வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
  • மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்படும்.
  • காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.
  • 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது
  • விபத்து இழப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு

நிதி பகிர்வில் மாற்றம் இல்லை!

  • மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை; 41% அளவிலேயே தொடரும்.
  • சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்; புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
  • மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE-மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
  • வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.
  • மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.

மத்திய பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்

  • ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
  • தமிழ்நாட்டின் பொதிகை மலை, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.
  • 2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.
  • 2026-27 நிதியாண்டின் மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
  • 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
  • முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
  • கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 
  • தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.

நீர் வழித்தடம்; அதிவேக ரயில்

  •  இந்தியாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்க நீர்வழி முனையம் அமைக்கப்படும்.
  • நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
  • மும்பை – புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி
  • தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
  • தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
  • நாட்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
  • மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
  • வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய விதிகளில் தளர்வு.
  • தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
  • இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்; புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10% ஆக உள்ள முதலீடு வரம்பு, 24% ஆக அதிகரிக்கப்படுகிறது.

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

  • காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.
  • செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.
  • பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்.
  • சென்னை – பெங்களூரு; சென்னை – ஐதராபாத் இடையே அதிவேக  ரயில் வழித்தடம் அமைகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
  • மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்
  • இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும்.
  • பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், ‘கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories