மும்பை இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இன்று வர்த்தக நேரம் துவங்கியதும் துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது, உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் முக்கிய நிறுவன பங்குகளின் 3வது காலாண்டு நிகர லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் அந்த நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் காணப்படுகிறது.
சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகள் கடந்து சாதனை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari