சென்னையில் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பு: எல்லாம் ‘மக்கள்’ முதல்வர் மயம்!

Published:

parade_TN நாட்டின் 66 வது குடியரசு தின விழா கொண்டாடப் படுகிறது.  இதை ஒட்டி, இன்று சென்னையில் நடத்தப் பட்ட குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்துக்கு பதிலாக, முன்னாள் முதல்வர் “ஜெயலலிதா” படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்றது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படைத் தளபதிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குடியரசு தின விழா அணிவகுப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் வரிசையாகச் சென்றன. தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, மின்சார துறை, கூட்டுறவுத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வி துறை உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில், அவற்றின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தி அணி வகுப்பும் நடைபெற்றது. இந்த அலங்கார ஊர்திகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது நிறைவேற்றிய சாதனை திட்ட செயல் விளக்கப் படங்களுடன் ஒவ்வொரு துறை வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்துக்குப் பதிலாக இடம்பெற்றிருந்த இந்தப் படங்களால், தற்போது, பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img