வீராணம் ஏரி நீர்மட்டம் 46.6 அடியாக உயர்வு!

Published:

veeranam lake - 2026
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீர், கொள்ளிடம் ஆற்றின் வடவாறு கால்வாய் வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால் ஏரி நிரம்பியது.

இதனால் ஆகஸ்ட் 26முதல் ஏரியில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. 34 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட்டதால் 102 ஊர்களில் உள்ள 44ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 74 கனஅடி தண்ணீர் குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழை பெய்யும் என எதிர்பார்த்ததால் நீர்மட்டம் 45 அடிக்கு மிகாமல் பொதுப்பணித் துறையினர் பராமரித்து வந்தனர்.

எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நொடிக்கு ஆயிரத்து 350 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46புள்ளி 6 அடியாக உயர்ந்துள்ளது!

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img