நடிகர்கள் சினிமாவில் மட்டும்தான் உடனடி முதல்வராக முடியும்: சீண்டும் செல்லூர் ராஜூ!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
sellur-raju-in-madurai
sellur-raju-in-madurai

கமலை கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லை, அவர் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை என்று, மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

மதுரை துவரிமான் கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்! அதனைத் தொடர்ந்து மேடையில் பேசியவர்…

நல்லவர்கள் ஆட்சி செய்தால் மழை மும்மாரி பெய்யும் என கூறுவர்கள், அதற்கு சான்றாக மழை பெய்து வருகிறது, திராவிட இயக்க வந்த பின் பெண்களின் உரிமை பாதுகாக்கப் பட்டுள்ளது, பெண் எல்ல நிலையில் உயர வேண்டும் என நினைத்தவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

20 ஆண்டுகள் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை, திமுக கருணாநிதி போன்ற வேசம் போடும் கட்சி இல்லை…

விவசாயிகளின் துணை நிற்போம் என கூறும் எதிர்க் கட்சி தலைவருக்கு தன்னுடைய முடியை (மயிரை) மட்டும் தான் நட தெரியும் வயலில் பயிரை நடத் தெரியாது!

ஏசி அறையில் இருந்து கொண்டே எல்லோரும் உடனடியாக முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி? வருகிறார்கள், தமிழக மக்கள் என்ன முட்டாள்களா?

நடிகர்கள் புற்றீசல் போல் வந்துள்ளனர், சினிமாவில் மட்டும் தான் உடனடி முதல்வராக முடியும், தமிழகத்தை திராவிட இயக்கம்தான் ஆளும்,மற்ற எவருக்கும் தமிழகத்தில் இடம் கொடுக்கப்படாது.. என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கமலை கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை!

அதிமுகவிற்கு பெண்கள் வாக்கு அதிகம், எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியே அதிமுகவிற்கு தான் ஓட்டு போடுவாங்க, நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், நடிகர்கள் பார்க்க மட்டுமே காட்சி பொருளாக மட்டுமே மக்கள் பார்ப்பார்கள்,

எதிர்க்கட்சி தலைவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் பேச தைரியம் இருக்கிறதா திராணி இருக்கிறதா,கூட்டணிக் கட்சிகள் எங்களுடைய நண்பர்கள், கூட்டணிக் கட்சிகளை நண்பேண்டா எனக் கூறும் அளவுக்கு உயிரையே கொடுப்போம்,

தேமுதிக கூட்டணியில் சீட்டு ஒதுக்கிடு குறித்த கேள்விக்கு தேர்தல் வரும்போது அது பற்றி பேசலாம் என கூறினார்,

அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது என்பது குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படுகிறது, திருட்டுத் தனம் பண்றவங்கள லஞ்சம் வாங்குபவர்களை திருத்தவே முடியாது அதற்கு தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்,

எம்ஜிஆர் எம்ஜிஆர் என கூறும் கமல் அதிமுகவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும், எம்ஜிஆர் மடியில் அமர்ந்த எல்லோரும் சொல்கிறார்கள், எம்ஜிஆர் துவங்கியது கட்சி அதிமுக அது இந்த கட்சி மட்டுமே என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.