
லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புதுறை காவல்ஆய்வாளர் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்த பெருமாள்பாண்டி என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கில் அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கானது!
இதில், பெருமாள் பாண்டிக்கு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமினில் வெளியில் வந்திருந்தார் பெருமாள் பாண்டி!
இந்நிலையில் இன்று காலை மதுரை தத்தனேரி ஈஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள நேரு தெருவில் உள்ள தனது வீட்டில் மனைவி உமா மீனாட்சியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுத்தியலால் அவரைத் தாக்கியுள்ளார்! இதில் படுகாயமடைந்த உமா மீனாட்சி உயிரிழந்தார்! இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள்பாண்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்!
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் செல்லூர் காவல்துறைக்கு அளித்த தகவலையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்!
முன்னாள் ஆய்வாளர் பெருமாள்பாண்டிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜாமினில் வெளியில் வந்திருந்த அவர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!