கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

rahulgandhi sonia - 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு சோனியாகாந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சோனியா காந்தி, கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். சோனியா எழுதியுள்ள கடித நகலோடு இந்த தகவலை திமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.