சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து தப்பிக்க முயன்ற நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வடமாநில இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியைக் காட்டி ஆறு லட்சம் ரூபாய் பணத்தை காசாளரிடமிருந்து கொள்ளையடித்துள்ளார்.
பின்னர் வெளியே சென்ற இளைஞர் துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களையும் மிரட்டியுள்ளார். இதைதொடர்ந்து அங்கிருந்த போலீசார் கொள்ளையனை பிடிக்க முற்பட்டபோது, போலீசாருடன் இணைந்து பொதுமக்களும் கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் பீகாரை சேர்நத் சுனில் யாதவ் என்பதும், தற்போது கேளம்பாக்கத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
இந்நிலையில், கொள்ளை சம்பவத்திற்கு உதவியர்கள் குறித்தும், துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கினான் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.