இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் டிமுத் கருணரத்னே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் நுவன் பிரதீப், துஷ்மந்த சேமேரா மற்றும் ஷேஹன் மதுஷங்க ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கருணரத்னே காயமடைந்துள்ளது இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி வரும் ஜூன் 6ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.