புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிட உள்ளார் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இன்று (மே 4) வெளியிட உள்ளார். இந்தப் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சிகள் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றார்.
இன்று புதிய பாடத்திட்ட நூல்கள் வெளியீடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari