நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை, சூலுார், கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், கடந்த ஏப்ரல் 27ம் தேதி, ‘சீல்’ வைத்தனர். தொழிற்சாலை மேலாளர் ரகுராமன், மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.குட்கா தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்திய போது, ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்வதாகக் கூறி, தி.மு.க., – எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் போராட்டம் நடந்தது. அதில் ஈடுபட்ட, தி.மு.க., நிர்வாகிகள், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ., கார்த்திக்கை தேடி வருகின்றனர். இதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று காலை, கோவை செஞ்சிலுவை சங்கம் முன், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari