ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழக்கமாக சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு பதிலாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தி பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட விரும்பியது. இதை தோடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 6 முதல் 10ம் தேதி வரை பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
துலிப் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் புஜாரா மற்றும் முரளி விஜய் இருவரும் பகலிரவு பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.