இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இதனால், இன்று முதல் 25ம் தேதி வரை திருச்சி – தஞ்சை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, 8 மணிக்கு தஞ்சையை சென்றடையும். இதே போல 12ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை தஞ்சையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது காலை 8.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். இரு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், திருவெறும்பூர், பூதலூரின் நின்று செல்லும் என்றும், இதேபோல், மன்னார்குடி – திருச்சி மார்க்கத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி-தஞ்சை இடையே சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே
Popular Categories



