balakumaran1 - 2026பிரபல எழுத்தாளரும் சினிமா திரைக்கதை ஆசிரியருமான பாலகுமாரன் சற்றுமுன்னர் சென்னை காவேரி மருத்துவனையில் காலமானார். அவருக்கு வயது 71

200-க்கும் மேற்பட்ட நாவல்கள் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதி உள்ள எழுத்தாளர் பாலகுமாரன், திரைத்துறையிலும் முத்திரை பதித்தவர். இவர் நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன் உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி கே.பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் எழுதிய நாவல்களில் பச்சை வயல் மனது. இரும்புக்குதிரைகள், அகல்யா, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, கரையோர முதலைகள் ஆகியவை பிரபலமானவை. அதேபோல் ஒன்றானவன், ஓசையற்ற அலறல், கல் பரிசல், தோழி போன்ற சிறுகதைகள் அனைவரையும் கவர்ந்தவை.

ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் இணைந்து திரைக்கதை எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending