மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பேசிய கமல்ஹாசன், “மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு தெரியும்.
அவருடன் பல கதைகளை பேசி கொண்டிருப்போம். நாங்கள் எவ்வளவு பெரிய ஆளாக மாறுவோம் என்று தெரியாத காலம் அது. அற்புதமான எழுத்தாளர், இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதியிருக்கிறோம்.” என்றார்.



