தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் சட்டமன்ற குழு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
இந்தக் கூட்டத்தில் பேரவை எவ்வளவு நாட்கள் நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மே 29ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது



