உலகின் முதல் மனிதன், தமிழகத்தில் தோன்றியதற்காக தடயங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்று கூறப்பட்டுவருகின்றன. இந்த நிலையை மாற்றி திருவள்ளூர் மாவட்டத்தில் தான் முதலில் மனிதன் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், இந்த செய்தி தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.



