குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

சற்றுமுன் தமிழகம்

04 May30 guttga - 2026தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தனி நபர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.