கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கபடவுள்ளது. இவ்வழித்தடத்தில் அகலரயில் பாதை பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரம் இருமுறை செல்லும் தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இன்று புனலுாரில் நடக்கும் விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென்கொகைன் துவங்கி வைக்க உள்ளார்.தற்போது கொல்லத்திலிருந்து எடமண் வரை இயங்கும் பாசஞ்சர் ரயில்களை, செங்கோட்டை,- தென்காசி, திருநெல்வேலிக்கும், மற்றொரு ரயிலை விருதுநகர் வழியாக மதுரைக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம்-கொல்லம் தினசரி ரயில், பாலக்காடு – புனலுார் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு, குருவாயூர்-புனலுார் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடுவார் என தெரிகிறது. நீட்டிப்பு செய்யப்படும் இரு ரயில்களும் மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களுக்கு இணைப்பாகும் விதத்தில் நேரம் இருக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று முதல் தாம்பரம்–நெல்லைமுன்பதிவில்லா ரயில் இயக்கம்ஏற்கனவே ஏப். 27 முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட தாம்பரம்-நெல்லை முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட அந்தியோதயா ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது. தினமும் நள்ளிரவு 12:30க்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு காலை 9:40 மணி, மதுரைக்கு 10:45, விருதுநகருக்கு 11:43 வந்து மாலை 3:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருதுநகருக்கு இரவு 7:28 மணி மதுரைக்கு 8:45க்கு வந்து காலை, 9:45 மணிக்கு,
தாம்பரம் சென்றடையும். இதன் துவக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.



