பீகாரில் நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சி ! : பாஜகவை விரட்டியடித்து பாடம் புகட்டிய பொது மக்கள்

Published:

பீகார் மாநில அளவிலான பாஜக தலைவர்களை முன்னிறுத்தாமல் தன்னையே முன்னிறுத்தி, ஏதோ தனக்கும், நிதீஷ் குமாருக்கும்தான் நேரடி மோதல் என்பதுபோல காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி. அதுவே அங்கு பாஜகவை வீழ்த்த முக்கியக் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கி உள்ளது. இதில், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது . 10 மணிக்கு மேல் நிதீஷ் – லாலு கூட்டணி 170 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 122 இடங்களி்ல் வெற்றி பெற வேண்டும்.

மாலை 5 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 56 இடங்களிலும், நிதிஷ்-காங்., கூட்டணி 179 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

பீகாரில் தவறான முகத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது பாரதிய ஜனதா கட்சி. அந்தத் தவறான முகம் பிரதமர் மோ[டி. சுஷில் குமார் மோடியைத்தான் அவர்கள் முன்வைத்து தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் தவறான மோடியை முன்வைத்து இப்போது மண்ணைக் கவ்வியுள்ளனர்.

இது பிரதமருக்கும், ஒரு முதலமைச்சருக்கும் இடையிலான மோதலாக மாறி விட்டது. இதில் பிரதமர் வீழ்த்தப்பட்டு முதல்வர் வென்றுள்ளார். இது பிரதமருக்கு பெரும் மானக்கேடு.

ஒரு மாநிலத் தேர்தலில் இப்படி நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடி, உள்ளூர் தலைவர்களைத்தான் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பீகார் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். ஆனால் அவரை நிதீஷை நேரடியாக எதிர்த்தார். அவருக்கும், நிதீஷுக்கும் நேரடி மோதல் போல காட்டிக் கொண்டார். இது தவறாகும்.

987ம் ஆண்டும் இதுபோல நடந்தது. அப்போது மேற்கு வங்கத் தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசுவை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார் அப்போதை பிரதமர் ராஜீவ் காந்தி. அவரது பிரசாரத்தால் காங்கிரஸுக்கு 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆனால் ஜோதிபாசு 6 சதவீத கூடுதல் வாக்குகளைத் திரட்டி வென்று விட்டார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

இப்போது பீகாரிலும் அதுவே நடந்துள்ளது. உள்ளூர் தலைவர்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் மோடியே நேரடியாக பீகாரில் பிரசாரம் செய்தார். அவருக்கும் நி்தீஷுக்கும்தான் நேரடி மோதல் என்பதைப் போல காட்டிக் கொண்டார். உள்ளூர் தலைவர்களை அவர் மதிக்கவில்லை. அது மிகப் பெரிய தவறாகும். மாநிலத் தேர்தலில் மாநிலத் தலைவர்கள்தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மாநில முகம்தான் முக்கியமானது. அப்படிப் பார்த்தால் சுஷில் குமார் மோடியைத்தான் பிரதானப்படுத்தியிருக்க வேண்டும் பாஜக. ஆனால் தவறான மோடியை முன்னிறுத்தி வீழ்ந்துள்ளனர்.

பீகார் தேர்தல் அத்தனை எதிர்க்கட்சிகளுக்கும் பாடமாகும். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும். நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். விதம் விதமான கூட்டணிகளால் பலம் கிடைக்காது. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒ்ருங்கிணைந்த கூட்டணி அவசியம் என்பதையே பீகார் தேர்தல் உணர்த்துகிறது.

இருப்பினும் காங்கிரஸ் நாடு முழுவதும் ஆதரவை வைத்துள்ளது. நாடு முழுவதும் தொண்டர்களை வைத்துள்ளது. நிதீஷ் குமார் அப்படி இல்லை. பீகாரைத் தாண்டி அவரால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. இதேபோலத்தான் பல பிராந்தியக் கட்சிகள் உள்ளன. அவை அந்தந்த மாநிலத்தில் பலம் வாய்ந்தவை. அவை அனைத்தும் கை கோர்க்க வேண்டும். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் ஆதரவு வைத்துள்ளதால் அக்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்கலாம்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பீகார் தேர்தல் முடிவை நான் ஏற்கனவே கணித்திருந்தேன். மோடியும், ஷாவும் விரட்டப்பட்டுள்ளனர். பீகார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img