ஜப்பானிய மோட்டர் சைக்கிள் நிறுவனமான, காவசாகி நிறுவனம் தனது புதிய மாடலான 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R சூப்பர்பைக்குகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 3 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த பைக்கை கவாசாகி டீலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் தேதியை இன்னும் இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜூலை மாதத்தின் 15ம் தேதி வாக்கில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உலகளவில் சூப்பர் பைக்குகளை விரும்புவர் களிடையே 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R ஏற்கனவே பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ZX-10R பைக்குகள் முன்பு முழுவதும் கட்டமைக்கப்பட்ட ஒரு வாகனமாகவே (Completely-Built Unit) விற்பனை செய்யப் பட்டது. ஆனால் 2018 மாடல்கள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பார்ட்ஸ்களுடன் புனேவில் உள்ள சாகன் ஆலையில் தயாரிக்கப் பட்டுள்ளது. புதிய 10R பைக்குள் முற்றிலும் நாக்-டவுன் (Completely Knocked-Down) செய்யப்பட்ட தயாரிப்பாகும். முற்றிலும் நாக்-டவுன் செய்யப்பட்டுள்ளதால், இந்த பைக்கின் விலை குறைவதோடு, வரையறுக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இந்த பைக் டெல்லியில் ஷோரூம்க்கு முந்தைய விலை 18 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
998cc லிக்யுட் கூள் இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் மூலம் இயங்கும் நிஞ்ஜா ZX-10R, 194bhp மற்றும் 114Nm சுழச்சி திறன் கொண்டது. மேலும், 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இன்ஜினுடன் இணைக்கப் பட்டுள்ளது.
120/70 ZR17 மற்றும் 190/55 ZR17 ஆகியவற்றின் முன்புற மற்றும் பின்புற டயர்கள் முறையே அலுமினியம் சுற்றளவு பிரேம்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜிபி மாடல்களில் பயன்படுத்தப்படும் முறை போன்று இந்த பைக்கில் சோவா 43mm பேலன்ஸ் ப்ரீ போர்க் சஸ்பென்சன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன்புற பிரேக்குகள், 330mm பிரம்போ செமி-ப்ளாட்டிங் டிஸ்க் ஜோடிகள் மூலமும், பின்புற பிரேக் 220mm டிஸ்க்கை அமைப்பு கொண்டுள்ளது. இந்த பிரேக்கிங் முறை கவாசுகி இன்டலிஜின்ட் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஸ்போர்ட் கவாசுகி திர்க்ஷ்ன் கண்ட்ரோல், கவாசுகி லான்ச் கண்ட்ரோல் மாடல், கவாசுகி இன்ஜின் பிரேக்கிங் கன்ரோல், கவாசுகி குயிக் ஷிப்ட்டர் மேற்புறத்தில் மட்டும், கவாசுகி கார்னர் மேனேஜ்மெண்ட் பங்ஷன், போஸ்க் இன்டர்டைல் மெசர்மென்ட் யூனிட் போன்ற எலக்ட்ரானிக் வசதிகளையும் இந்த பைக் கொண்டுள்ளது.
இந்த பைக்கில், 100 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் முழு வேகம், 80 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் நடுத்தர வேகம் அல்லது 60 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் குறைந்த வேகம் போன்றவைகளை தேவைக்கேற்ப செலக்ட் செய்யும் வசதியும் உள்ளது.
உலக மார்க்கெட்டில் இந்த பைக் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ZX-10R ABS ஸ்டேயின் சில்வர், ZX-10R SE பிளாக் மற்றும் ZX-10R KRT மாடல் கிரீன் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.



