பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேகோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார்.மேலும் நாளை மறுதினம் (நவம்பர் 15) “நாகரீகத்திடம் இருந்து கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்வுள்ள கருத்தரங்கில் அவர் உரையாற்றுகிறார்.
இந்தியாவின் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கோவாவில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இந்திய அறக்கட்டளை விடுத்துள்ள அழைப்பை ஏற்று, கோவாவுக்கு அவர் வருகை தருகிறார்.
கோவாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா ஆளுநர் மிருதுள் சின்ஹா, கோவா முதல்வர் லக்ஷ்மிகந்த் பர்சேகர் ஆகியோரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


