துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்தியா அணி அபாரமாக ஆடி பாகிஸ்தானை வென்றது.
துபாயில் கபடி மாஸ்டர்ஸ் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா என ஆறு நாடுகள் கலந்துகொண்ட இதன் அறிமுக ஆட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்ததால், பாகிஸ்தான் அணியினரால் இந்திய வீரர்களை பிடிக்க முடியவில்லை. இதனால் 22க்கு 9 என இந்தியா முன்னிலை வகித்தது. தொடந்து நடைபெற்ற 2ஆம் பாதியிலும் பாகிஸ்தான் சறுக்கலையே சந்தித்தது. முடிவில் இந்திய அணி 36க்கு 20 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வென்றது.



