சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டோ கே.எம்.கரியப்பாவிற்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூரில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு நியமிக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் முதல் தலைமை தளபதியான கே.எம்.கரியப்பாவிற்கு சிலை திறக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் டி.கே.கவூல் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கே.எம்.கரியப்பாவின் மகன் கே.சி. கரியப்பா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் முதலில் இந்தியன் என்பதை உணர வேண்டும் என்றார். இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



