T20 கிரிக்கெட்: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல்

சற்றுமுன் விளையாட்டு

07 June26 India Ireland t20 - 2026இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று டப்லினில் தொடங்கவிருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 T20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன. இதனிடையே அயர்லாந்து அணியுடன், இந்திய அணி இரண்டு T20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்லினில் இன்று தொடங்கும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.