தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்க உள்ளது.
இன்று நடைபெறும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை சார்ந்த விவாதங்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள இந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.




