ஓடத் தொடங்கிய 2ஆம் நாளே பாதையில் மரம் விழுந்து பாதிப்பு! 3 மணி நேரம் மக்கள் தவிப்பு!

Published:

tree in railway track kollam senkottai - 2026

கொல்லம் – புனலூர் – செங்கோட்டை மலை ரயில் பாதையில் நேற்று நள்ளிரவு மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பாலக்காடில் இருந்து புனலூருக்கு வந்து கொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், புனலூர்- செங்கோட்டை மலை ரயில் பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடப் பட்டதை அடுத்து, ஜூலை 9 திங்கள் கிழமை முதல் திருநெல்வேலி வரை நீட்டிக்கப் பட்டது.

இந்த ரயில் இயக்கப்பட்ட இரண்டாவது நாளான நேற்று, ரயில் பாதையில் மரம் விழுந்ததால், ரயில் நிறுத்தப் பட்டது. இந்த ரயில் கொல்லத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டு இருக்கும் போது அதிகாலை மூன்று மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உக்கணம் என்ற இடத்தில் பெரிய மரம் ஒன்று ரயில் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.

பாதையில் ரயில் கிடப்பதைக் கண்டு, ரயிலை உடனடியாக டிரைவர் நிறுத்தியுள்ளார். இதனால் விபத்து தவிர்க்கப் பட்டது. அடந்த மலைக் காட்டுப் பகுதியில் ரயில் நின்றதால், பயணிகள் சுமார் மூன்று மணி நேரம் தவியாய்த் தவித்தனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img