குரங்கை சீண்டும் நபர்.. சீரியஸான குரங்கு..! வைரல்!

Published:

monkey - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சீண்டலால் கோபம் கொண்ட குரங்கின் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒருவர் மீண்டும் மீண்டும் குரங்குகளை கிண்டல் செய்து கடுப்பேற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது.

கடுப்பின் உச்சிக்கு சென்ற குரங்குகள் ஒன்றாக அந்த நபரைத் தாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அந்த மனிதனின் அதிர்ஷ்டம் என்னவென்றால் கண்ணாடிக்கு இந்தப் பக்கமும் குரங்கும் மறுபுறமும் அவரும் இருக்கிறார்கள்.

நடுவில் கண்ணாடி இருபதால்தான் அவரும் தைரியமாக குரங்குகளை கடுப்பேற்றினார் என்பது மற்றொரு விஷயம்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கண்ணாடி தடுப்பு வழியாக, ஒருவர் குரங்குகளை தொடர்ந்து கேலி செய்வதை காணமுடிகிறது.

குரங்குகளும் வெகு நேரம் அமைதியாக இருக்கின்றன. அவர் ஒரு காகிதத்தை ஓட்டை மூலம் குரங்குகளை நோக்கி உள்ளே நுழைக்கிறார். குரங்கு அதை பிடிக்க வரும்போது பின்னுக்கு இழுத்து விடுகிறார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

சிறிது நேரம் காகிதத்தை பிடிக்க முயற்சிக்கும் குரங்கு, பின்னர் கோபத்தின் எல்லையைத் தாண்டி, கடுப்பாகி அந்த நபர் மீது பாய முயற்சிக்கிறது.

அங்கு இருக்கும் இரு குரங்குகளும் அவர் மீது பாய முயற்சிக்கின்றன. ஆனால் குரங்குகளுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கண்ணாடி சுவர் இருப்பது தெரியாது.

இங்கு கண்ணாடி இல்லாவிட்டால், குரங்குகள் அந்த நபருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். கண்ணாடி இருந்ததால், அந்த நபர் தப்பினார். ஆனால், கண்ணாடி இல்லாமல் இருந்திருந்தால், அந்த நபர் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை குரங்குகளுடன் விளையாடி இருக்கமாட்டார்.

மனிதனுக்கும் குரங்குகளும் இடையிலான கியூட் சண்டையின் இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு வருகிறார்கள். பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோ earth.brains என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 5.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img