திங்கள் கிழமை சென்னை வந்திருந்த பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, தாம் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோது, அதனை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா!
அப்போது மைக்ரோ இரிகேஷன் என்ற சொல்லுக்கு தமிழாக்கம் செய்தபோது, சிறு நீர்ப்பாசனத் திட்டம் என்று தமிழாக்கினார். இந்த இரு சொற்களையும் இணைத்து, சிறுநீர்ப் பாசனத் திட்டம் எனக்க் கொண்டு, சமூக ஊடகங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு பாஜக.,வினரும் சளைக்காமல் பதிவுகளைப் போட்டு வருகின்றனர்.
நீர் பாசனங்களில்
1. சிறு நீர் பாசனங்கள் (Micro irrigations)
2. சொட்டு நீர் பாசனம் ( Drip irrigation)
3. நுண்ணீர் பாசனம் ( Micro water irrigation)
4. தெளிப்பு நீர் பாசனம் ( spray irrigation)
5. மூடு பனி நீர் பாசனம் (Fog irrigation) – என்று பல வகை உண்டு! ஹெச்.ராஜா ஒரு விவசாயி. அவர், சரியாகத்தான் தமிழாக்கிச் சொல்லியிருக்கி்றார் என்று கூறுகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள்.
விவசாய நிலத்தை எட்டிப்பார்க்காத மடையர்கள் விவசாயத்தை ஆன்ட்ராய்டு போனில் செய்யும் மண்டுகள் மீம்ஸ் போட்டு மகிழ்கின்றன என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஹெச்.ராஜாவும் தன் டிவிட்டர் பதிவில், எந்தக் கருத்துப் பதிவும் இடாமல், இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
Without comment pic.twitter.com/YMwEGs0lAC
— H Raja (@HRajaBJP) July 10, 2018
இதற்கு டிவிட்டர் பின்னூட்டங்களில் ஒன்று இது…
H ராஜா பேசிய “சிறு நீர்” பாசன திட்டத்தை “சிறுநீர்” பாசனம் என்று தவறுதலாக புரிந்து கொண்ட திராவிட பாய்ஸ்.#அதுசரி?
ராமசாமி நாயக்கரின் மூத்திர சட்டியை முகர்ந்து பார்த்தே வளர்ந்தவர்களுக்கு மூத்திரத்தைப் பற்றியே தானே ஞாபகம் இருக்கும்.#திருட்டுதிராவிடம்
— நெல்லை சிவா (@nellaisivapt) July 10, 2018





எதறà¯à®•ெடà¯à®¤à¯à®¤à®¾à®²à¯à®®à¯ தபà¯à®ªà¯†à®Ÿà¯à®•à¯à®•à¯à®®à¯ இவரà¯à®•ளை. அநà¯à®¤,,, கூடà¯à®Ÿà®®à¯†à®©à¯à®±à¯ சொலà¯à®²à®²à®¾à®®à®¾?