சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு, நாளை இரவு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இரவு, 8:00 மணிக்கு கிளம்புகிறது. ஜூலை, 1ல் காலை, 8:45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மூன்று ‘ஏசி’ பெட்டி, 12 படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி, மூன்று பொது பெட்டிகள் உள்ளன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தபாலம், திருச்சூர், ஆலுவா ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இத்தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் இன்று இயக்கம்
Popular Categories



