வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி, 2 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, குமரி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் சேலம், திருப்பூர் வழியாக கோவை செல்லும் ரயில்களுக்கு இந்த டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நவம்பர் 3ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பாண்டியன் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. நவம்பர் 4ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், நவம்பர் 5ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.



