தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் ஆய்வு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்வி ஒன்று பதிலளித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.



