மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் யாகபூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடாகி காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்துள்ளனர்.
Published:

