கடந்த ஜூன் 6-ம் தேதி சினிமா படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் புறப்பட்டுப்போன ரஜினி, 35 நாள்கள் படப்பிடிப்புக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி சென்னைக்குத் திரும்பினார். மறுநாள் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்களில் சிலரை சந்தித்து ஆலோசனை செய்தார். அன்று மாலையில் நட்சத்திர ஹோட்டலில் ஏ.சி.சண்முகத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் அடுத்த ஷெட்யூல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடக்கிறது. அதற்கான முன் ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். ரஜினியைப் போலவே ஒளிப்பதிவாளர் திருவும் சென்னை திரும்பிய பிறகு டேராடூன் செல்ல இருக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் படப்பிடிப்புக்காக இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு டேராடூன் செல்கிறார் ரஜினி. அவரது ஃபேவரேட் பிரதேசமான இமயமலை அடிவாரத்தில் உள்ள டேராடூனில் ஷூட்டிங் நடப்பதால் ரஜினிக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.



