இந்தியாவில், 12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை, பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று சேலம், மரவனேரியில் நேற்று நடந்த பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின், ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில், நடந்த வரும் வருமான வரிசோதனை பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும், நிச்சயம் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதில் உண்மை இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பெண்கள், சிறுமியருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என்றார்.
12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை தரும் சட்டத்தை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். .



