தொடங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா

Published:

18 July27 Maha puspa vizha - 2026144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவின் படித்துறைகள் அமைக்கும் பணியின் கால்கோல் விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஜூயர் சுவாமிகள், மடாதிபதிகள், அகில இந்திய துறவிகள் சங்கத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கலக்கக்கூடிய ஒரே வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு உள்ளது. தாமிரபரணி ஆறானது தமிழ் வளர்த்த அகத்தியர் முனிவர் வாழ்ந்த பொதிகை மலையின் சமவெளிப்பகுதியில் பாபநாசம் முதல் புண்ணகாயல் வரையிலான 124 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கிறது. இதில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில்தான் தற்போது தாமிரபரணி மகாபுஷ்கரணி விழா தொடங்கியுள்ளது.

Related articles

Recent articles

spot_img