சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கான்கிரீட் தடுப்புகளில் மோதிய விபத்தில் ஆறுபேர் பலியாகினர். இது குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் சென்னையில் தெரிவித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர் தெரிவித்ததாவது:சம்பவ இடத்தில் கான்கிரீட் தடுப்பு மற்றும் ரயில்பாதை இடையே உள்ள பகுதியை அளந்து, தகவல் சேகரித்து ஆலோசிக்கப்படும். ஆறுபேர் பலியான சம்பவம் குறித்து ஜூலை 30 ல் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம், என்றார். மறுஉத்தரவு வரும்வரை புறநகர் ரயில்கள் போக்குவரத்து அதன் பாதையில் மட்டும் நடைபெறும் என கோட்ட மேலாளர் நவீன் குலாதி தெரிவித்தார்.
சென்னை ரயில் விபத்து: இன்று விசாரணை
Popular Categories



