திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருகை தர உள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஒருவாரம் முன் திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது.
அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது. மருத்துமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
அவருக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டு தற்போது சீராகி உள்ளது.





ஜனாதிபதியின௠வரà¯à®•ை அவசியமா ?