உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தார்.
கால் இறுதியில் சாய்னா, முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினையும், சிந்து, 8ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவையும் எதிர்கொள்கின்றனர். இத்தொடரில் சாய்னா 2015ல் வெள்ளியும், 2017ல் வெண்கலமும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரரான சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் விட்டின்கசை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்று அசத்தினார். இதே போல, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரான்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட்களில் மலேசியாவின் சூன் ஹாத், ஜேமி லாய் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.



