தேனி: தமிழகத்தில் ஆண்ட கட்சிகளும் சரி, ஆள்பவர்களும் சரி ஒன்றுமே செய்யவில்லை என்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேமுதிக., சார்பில் மக்களுக்கான மக்கள் பணி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் நடத்தி இருக்க வேண்டும் ஆனால் தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறுகிறார்… நான்கரை ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடுகள்தான் கிடைத்துள்ளன என்று. ஆனால் இன்னும் ஆறு மாதத்தில் எப்படி ரூ. 2 லட்சம் கோடி முதலீடுகளுக்கான தொழில்களை உருவாக்க முடியுமா? முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் நன்றாக ‘யோகா’ செய்கிறார்கள். புரிந்து உணர்ந்து ஒப்பந்தம் போடுகிறார்களாம். அதற்கு 2 மாதமாம். 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவே இரண்டு மாதம் ஆகும் என்றால் ரூ 2 லட்சம் கோடி முதலீடுகள் என்பது எப்படி சாத்தியம் என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக, தேனி மாவட்ட மக்களைப் பார்த்து, இந்தத் தேனி மாவட்டம் 3 முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. யுபிஎஸ் என்பவர் உள்பட. ஆனால், இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆண்ட கட்சியும் ஒன்றும் செய்யவில்லை, ஆளும் கட்சியும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் என்றும் மக்களுக்காக மக்கள் பணி செய்யும் ஒரே கட்சி தேமுதிகதான் என்று கூறிப்பிட்டார் விஜயகாந்த்.
ஆண்டவர்களும் ஆள்பவர்களும் ஒன்றுமே செய்யவில்லை: தேனியில் விஜயகாந்த் பேச்சு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari