விவசாயியாக கார்த்தி நடித்த கடை குட்டி சிங்கம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு நிதி உதவியும் செய்தனர்.
நம் சென்னையில் ட்ரேட் சென்டரில் “நல்ல சந்தை” என்ற தலைப்பில் இயற்கை வழியில் விவசாயம் செய்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர். மேலும் மண், செம்பு பாத்திரங்கள், புத்தகங்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருட்கள், பொழுதுபோக்கிற்கு நம் பாரம்பரிய விளையாட்டுகள் என அனைத்தையும் ஒரே இடத்தில தொகுத்து வழங்குகின்றனர்.
ஆர்வம் உள்ளவர்கள் வந்து இவர்களுக்கு தங்களின் ஆதரவை வழங்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயியை காப்பது நம் அனைவரின் கடமையே.




