பரிவார தெய்வ மரபின் நண்பர் யார் :
இந்துவா – கிறிஸ்தவமா – இஸ்லாமா
பரிவார – குல தெய்வ – நாட்டார் மரபினரிடம் கிறிஸ்தவ – இஸ்லாமிய மதங்கள் என்ன சொல்கின்றனவென்றால், இந்துப் பெரு மரபு உங்களுக்கு சமூக அந்தஸ்து தரவில்லை. உங்களை அடிமையாக நடத்துகிறது. எங்கள் பக்கம் வாருங்கள். உங்களுக்கு சமூக அந்தஸ்து தருகிறோம்; ஆனால், ஆன்மிக சுதந்தரம் தரமாட்டோம். உங்கள் கலாசாரங்களை, கடவுள்களை விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்கின்றன.
(இந்த உடன்படிக்கையில் பல பிழைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்துப் பெரு மரபு குல தெய்வ நாட்டார் மரபினரை அடிமையாக நடத்தவில்லை. இரண்டாவதாக கிறிஸ்தவ இஸ்லாத்துக்குப் போனால் நாட்டார் மரபினருக்கு சுய மரியாதை, சமூக அந்தஸ்து தரப்படும் என்பது பொய். இந்து மதத்தில் வேர் ஜாதியாக இருந்தவர்கள் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்துக்கோ போனால் அங்கும் அடிமட்டத்தில்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது. எனினும் இந்த உடன்படிக்கையில் ஓர் எல்லைவரை உண்மை இருக்கத்தான் செய்கிறது).
இதன் மறுபக்கம், இந்துப் பெரு மரபு என்ன செய்கிறது என்றால் நாட்டார் மரபினருக்கு முழு ஆன்மிக சுதந்தரம் தருகிறோம்; சமூக அந்தஸ்து தரமாட்டோம் என்கிறது. இதிலும் இரண்டாவது வாக்கியம் முழுக்கவும் உண்மை அல்ல. எனினும் ஒரு வாதத்துக்காக இதையும் ஏற்போம்.
இப்போது நாட்டார் மரபினரின் முன்னால் வைக்கப்படும் உடன்படிக்கைகளில் எது அவர்களுக்குக் கூடுதல் நன்மையைத் தருவதாக இருக்கும்?
அந்நிய மதங்கள் நாட்டார் மரபினருக்கு சமூக அந்தஸ்து தரும்; ஆனால், அவர்களுடைய ஆன்மிக, கலாசார அடையாளங்களை அழித்துவிடும்.
தாய் மதம் நாட்டார் மரபினரின் ஆன்மிக, கலாசார அடையாளங்களைப் போற்றிப் பாதுகாக்கும். ஆனால், அவர்களுக்கு சமூக அந்தஸ்து தராது.
நாட்டார் மரபினரின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும். சமூக அந்தஸ்தும் வேண்டும்… அவர்களின் காலகாலமான கலாசார, ஆன்மிக அடையாளங்களும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். இதுதானே அவர்களுடைய குறைந்தபட்ச நியாயமான எதிர்பார்ப்பு.
இப்போது பாரம்பரிய இந்துப் பெரு மரபைச் சீர்திருத்தும் நோக்கில் உருவான இந்துத்துவ சக்திகள் நாட்டார் மரபினரிடம் அவர்கள் கேட்டபடியே, அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும் தருகிறோம்… உங்கள் ஆன்மிக அடையாளத்தையும் காப்பாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள்.
அந்தவகையில் மூன்றாவது அமைப்புதானே நாட்டார் பெரு மரபின் நியாயமான இயல்பான கூட்டாளியாக இருக்கமுடியும்.
அப்படியான ஒரு கூட்டு வலுவாக, முழுமையாக நடந்துவிட்டால் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் முற்றாகத் தோற்றுவிடும். எனவேதான் அவர்கள் இந்துத்துவ சக்திகளை மிகை அவதூறுகள் மூலம் ஓரங்கட்டுகிறார்கள். அதிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்களுக்கு எதிர்வினையாக இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் வன்முறை பதிலடியைக் காரணம் காட்டி நாட்டார் மரபினரை இந்துத்துவத்தில் இருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்.
இது விசித்திரமான முயற்சி.
ஒரு இஸ்லாமியரோ கிறிஸ்தவரோ அவர்கள் தரப்பு அடிப்படைவாதி செய்த வன்முறைக்குத் தரப்படும் பதிலடியில் இந்துத்துவரால் தாக்கப்பட்டால் அதனால் நாட்டார் மரபினருக்கு என்ன இழப்பு..? இந்துத்துவர்களின் அந்த வன்முறை என்பது நாட்டார் மரபினருக்கு எதிரானது அல்லவே. நாட்டார் மரபைக் கைவிட்டு விட்டுப் போனவர்கள் மீதான தாக்குதல்தானே. அப்படியிருக்கையில் இந்துத்துவத்தை நாட்டார் மரபின் அரசியல் சக்திகள் எதிரியாகப் பார்ப்பதேன்? அதைக் காரணமாக வைத்து இந்துத்துவ சக்திகளுடன் சேராமல் இருப்பதன் மூலம் இந்துத்துவ சக்திகளை மட்டுமா பலவீனப்படுத்துகிறார்கள். நாட்டார் அரசியல் சக்திகள் தம்மைத் தாமேயுமே பலவீனப்படுத்த அல்லவா செய்கிறார்கள்.
இந்துத்துவர்கள் – நாட்டார் அரசியல் சக்திகள் ஆகியோரின் ஒற்றுமை என்பது அவர்கள் இருவருக்குமே நன்மை பயப்பதுதான். அவர்களுக்கு இடையிலான இடைவெளி என்பது இருவருக்குமே பாதகமானதுதான். இந்த உண்மையை நாட்டார் அரசியல்வாதிகள் என்று புரிந்துகொள்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கும் நல்லது. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.
*
இந்துத்துவத்தின் வன்முறை
இந்துத்துவரின் வன்முறைபற்றி சில விஷயங்களை நாம் புரிந்துகொண்டாகவேண்டும். காந்தியைப் போல் அஹிம்சையை மட்டுமே போதிக்க அவர்களால் முடிவதில்லை. இந்து மதம் அஹிம்சையால் மட்டுமே காப்பாற்றப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது; அப்படிக் காப்பாற்றிவிடவும் முடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். துப்பாக்கியைக் கையில் எடுப்பது தவறுதான். ஆனால், நம் முன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருப்பவனை வீழ்த்த அது ஒன்றே வழியென்றால் அங்கு அதுவே சரி… அஹிம்சா பரமோ தர்ம… தர்ம ஹிம்சா ததீவ ச… Ahimsa Paramo Dharma; Dharma himsa tathaiva cha) அஹிம்சை உயரிய தர்மமே… தர்மத்தைக் காக்க மேற்கொள்ளப்படும் ஹிம்சையும் அதைப்போலவே உயர்வானதே. கன்றைத் தாக்கிக் கொல்லப் பாயும் ஓநாயை ஒரு பசு தன் கொம்பால் குத்தி விரட்ட முயன்றால் (கொல்லக்கூட அல்ல.. விரட்ட மட்டுமே முயன்றால்) அதை வன்முறை என்று சொல்லமுடியுமா என்ன..?
இந்துத்துவ சக்திகள் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியையும் இங்கு நாம் யோசிக்கவேண்டும். சமண, பௌத்த சமயங்கள் வாதப் பிரதிவாதம், தத்துவ விசாரம், துறவறம், வேத மறுப்பு, வைதிக, யாக–யஞ்ய எதிர்ப்பு என அஹிம்சை வழியிலான ஞான மார்க்க வழியை முன்வைத்து இந்து மதத்தை எதிர்த்தபோது இந்து மதமானது கோவில், பக்தி, இல்லறம், கர்ம மார்க்கம் என அதே அஹிம்சை வழியிலான எதிர்ப்பையே முன்வைத்து வென்று காட்டியது. இவ்வளவு ஏன்… கிறிஸ்தவ இஸ்லாமிய மத மாற்றங்களுக்கு இந்து மதத்தின் எதிர்வினையை ஒருவர் கூர்ந்து பார்த்தாலே இந்துத்துவரின் ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறார் என்பது புரியும்.
கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளை எதிர்க்க ராம கிருஷ்ண மிஷன், விவேகானந்த கேந்திரா போன்ற சேவை அமைப்புகளையே இந்துத்துவம் உருவாக்கியிருக்கிறது. அனைத்து ஜாதியினருக்கும் கல்வி, மருத்துவம், அனைத்து ஜாதியினரும் வந்து வணங்கும் கோவில்கள் என கிறிஸ்தவ மதமாற்ற தந்திரத்தை ஆத்மார்த்தமான சேவை மூலமே எதிர்கொண்டிருக்கிறது. அதே நேரம் இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள மட்டுமே இந்துத்துவம் ஆயுதத்தை ஏந்தியிருக்கிறது. ஒரு கோத்ரா படுகொலை நடந்தால் மட்டுமே ஒரு குஜராத் பதிலடி தரப்படுகிறது… தமிழகத்தை எடுத்துக்கொண்டால், பூலை நாத்திகம் பேசிய ஈ.வெ.ரா.யிஸ்ட்கள் ஆயுதத்தைக் கையில் ஏந்தாததால் அவர்களுக்கு எதிராக எந்த இந்துத்துவரும் ஆயுதத்தை ஏந்தவில்லை.
எந்த இந்துத்துவரும் மசூதியை இடிக்கவில்லை… கோவிலை இடித்துக் கட்டிய கட்டடத்தைத்தான் இடித்திருக்கிறர்கள். இன்னும் அதையே ஒழுங்காகச் செய்து முடிக்கவில்லை. அப்படியாக, இந்துத்துவர் கையில் இருக்கவேண்டிய ஆயுதத்தை இந்துத்துவரின் எதிரியே தீர்மானிக்கிறார். இந்துத்துவரின் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறிக்க வேண்டுமென்றால் இஸ்லாமியத் தீவிரவாதியின் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறித்தாலே போதும்.
காந்தி இந்த விஷயத்தில் செய்த தவறு இதைப் புரிந்துகொள்ளாததுதான். தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தியவரைப் பார்த்தே அவர் அஹிம்சையை போதித்தார். தாக்கியவர்களை விட்டுவிட்டார். இது எப்படியென்றால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்ணைப் பார்த்து அவமானத்தையும் வலியையும் பொறுத்துக்கொள் என்று போதிப்பதைப் போன்றது. அப்படி அவளிடம் அஹிம்சை போதிப்பவரை அவள் பளாரென்று கன்னத்தில் அறைந்தால் அதைத் தவறென்று சொல்லமுடியுமா என்ன?
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் இஸ்லாமிய வன்முறையை எதிர்த்து அவர்களும் வன்முறையைக் கையில் எடுத்தால் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் அஞ்சினார். ஒரு காட்டுக்கு தீவைக்கப்பட்டால் தீப்பிடித்த மரங்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தி, தீ பரவாமல் தடுப்பதுண்டு. காந்தி இப்படியான ஒரு செயலைத்தான் செய்தார். அது மிகவும் சரியான செயல்தான். ஆனால், காந்தி செய்த தவறு என்னவென்றால் அவர் காட்டுக்குத் தீவைத்தவர்கள் அணையாத தீப்பந்தங்களுடன் தொடர்ந்து வலம் வந்த நிலையில் அவர்களைத் தடுக்கவோ அவர்கள் கையில் இருக்கும் தீப்பந்தங்களை அணைக்கவோ எதுவும் செய்யாமல் காட்டில் இருக்கும் மரங்களை சற்றும் மனம் தளராமல் வெட்டி வீழ்த்தியபடியே சென்றார். தீ பரவாமல் தடுக்க தற்காப்பு நடவடிக்கை எடுப்பது என்பது வேறு. அதை மட்டுமே செய்துகொண்டிருப்பது வேறு.
எனவே, இந்து ஒற்றைப்படையாக்கமும் (வேற்றுமையில் ஒற்றுமை), தேவையான அளவிலான இந்துத்துவ வன்முறையும்தான் வல்லாதிக்க மதவாத சக்திகளிடமிருந்து இந்து மதத்தையும் அதனால் இந்தியாவையும் காப்பாற்றியிருக்கின்றன.
இந்துத்துவர்களுடைய தற்காப்பு பதிலடிகளைப் பார்க்கும் “நடுநிலையாளர்கள்’ சில கீறல் விழுந்த அறிவுரைகளைக் கிளிப்பிள்ளைகளாக எடுத்துச் சொல்வதுண்டு. இந்து மதம் சகிப்புத் தன்மை மிகுந்தது. இந்து மரபில் இந்து தத்துவங்கள், கடவுள்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நாத்திக மரபுக்கும் கூட இடம் தரப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஆன்மா அந்த சகிப்புத் தன்மையிலும் விவாதத்துக்குத் தயாராகும் தன்மையிலும்தானே இருக்கிறது என்றெல்லாம் பட்டியலிடுவார்கள்.
இது மிகவும் தவறான பார்வை (இந்து மதத்திலும் ஒரு நல்ல அம்சம் உண்டு என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரே நேரம் அதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு அடித்தாலும் மவுனமாகத் தாங்குவதுதானே உங்கள் பலம். அதை நீங்கள் மறக்கலாமா என்று கனிவுடன் வேறு கேட்பார்கள்)
முதலாவதாக இந்துப் பெருமரபு அந்த சுதந்தரத்தை வழங்கிய காலகட்டத்தில் எதிர் தரப்பினர் மட்டுமே இருந்தனர்; எதிரிகள் இருந்திருக்கவில்லை. இன்றைய இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் எதிர் தரப்பினர் அல்ல; இந்து மதத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள். கருத்துப் போருக்கு வருபவரிடம் கருத்து ரீதியாக மோதலாம். கத்தியைத் தூக்கிக் கொண்டுவருபவரிடம் கேடயத்தை உயர்த்தியும் வாளை உருவியும்தான் தற்காத்துக் கொண்டாகவேண்டும்.
அடுத்ததாக, அன்று இந்துப் பெருமரபு தன் மீதான விமர்சனங்களை அனுமதித்ததோடு நிற்கவில்லை. எதிர் தரப்பின் மீதும் கடுமையான விமர்சனங்களையும் அது முன்வைத்திருக்கிறது. கருத்துத் சுதந்தரம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல. அன்பு என்பது ஒரு வழிப்பாதை அல்ல. இன்று இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளைப்பற்றி விமர்சித்து யாரேனும் ஏதேனும் பேசுகிறார்களா? இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்பட்டுவருமென்றால் இந்து அப்படியான பெருந்தன்மையுடன் இருப்பது அவனுடைய பலவீனமாகத்தானே ஆகும். ஒரு நடுநிலையாளர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மையை பிற மதங்களுக்கும் கற்றுக்கொடுப்பதுதானே நியாயம்.
அடுத்ததாக, இஸ்லாமுக்கு மாறிய அல்லது மாற்றப்பட்டவரின் வழிவந்த இந்தியர் ஒருவர் இஸ்லாமிய குறியீடுகள், கடவுள்களை விமர்சித்து எதுவும் பேசுவதில்லை. உதாரணமாக முகமது நபியின் உருவத்தை வரைவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை; எனவே அதை வரையும் ஒருவர் கொல்லப்பட்டால் கொன்ற இஸ்லாமிய அடிப்படைவாதி செய்தது சரியே என்றே சொல்கிறார். இந்து தெய்வத்தை எப்படி வேண்டுமானாலும் வருணிக்க வரைய சுதந்தரம் தரப்பட்டிருக்கிறது எனவே, அதை நான் செய்வேன் என்றும் சொல்கிறார்.
உண்மையில் இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட அந்த நபர் எப்படி நடந்துகொள்ளவேண்டும். தெய்வங்களையும் குறியீடுகளையும் எப்படி வேண்டுமானாலும் சித்திரிக்கும் கலை சுதந்தரத்தை இந்து மரபில் இருந்து பெற்றுக்கொண்டு அதை இஸ்லாமிலும் பிரயோகிக்கத்தான் வேண்டும். அதில்தானே அவருடைய வேர்கள் இருக்கின்றன. அதைவிட்டுவிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதியின் குரலுக்கு பயந்துகொண்டு அங்கு மவுனம் சாதித்துவிட்டு, அதே இஸ்லாமிய அடிப்படைவாதியின் விருப்பத்துக்கு ஏற்ப இந்து மரபுகளை, குறியீடுகளை அதி சுதந்தரத்துடன் அணுகுவது முறையல்ல.
கலை சுதந்தரத்தை முழுவதுமாக அனுமதிக்கும் உயரிய இந்து மதத்தில் இருந்து பிரிந்துசென்றவர்கள் நிச்சயம் அதைச் சென்ற இடத்திலும் வலுவுடன் முன்னெடுக்கத்தான் வேண்டும். நடுநிலைவாதிகளும் அதைத்தான் முன்வைக்கவேண்டும். இஸ்லாமில்தான் அந்த சுதந்தரம் இல்லையே என்று சப்பைக்கட்டுகட்டக்கூடாது. மதத்தைத்தான் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். கலாசாரத்தை ஏன் கைவிடவேண்டும். அதிலும் மதம் விஷயத்தில்தான் பன்முகத்தன்மை என்ற உயரிய நிலையில் இருந்து ஒற்றைத் தெய்வம் என்ற அறிவற்ற ஆன்மிகத்துக்குக் கீழிறங்கியிருக்கிறீர்கள். சரி உங்களுக்கு மதமும் ஆன்மிகமும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், கலை என்பது முக்கியமானது என்று சொல்கிறீர்கள் அல்லவா. அப்படியானால், கலை சுதந்தரத்தை அனுமதித்த மரபின் உயிரணுக்களைப் பெற்ற நீங்கள் ஏன் மலடாகிப் போகவேண்டும்? வீரியமாக அங்கும் வேர் விட்டுக் கிளை பரப்ப அல்லவா வேண்டும். தெய்வத்தை எப்படி வேண்டுமானாலும் சித்திரிக்கும் இந்துப் பெரு மரபில் இருந்து முளைத்து வந்தவன் நான். முகமது நபியை எப்படி வேண்டுமானாலும் வரைவேன் என்பதுதானே இயல்பான முழக்கமாக இருக்கவேண்டும்.
எனவே இனியும் இந்துவுக்கு சகிப்புத்தன்மை பாடத்தை நினைவுபடுத்துவதற்கு முன்பாக அதைப் பிற மதத்தினருக்கு அதாவது மிகவும் தேவைப்படும் மதத்தினருக்குக் கற்றுக்கொடுங்கள். குறிப்பாக நடுநிலைகளுக்கும் கலைச் சுதந்தரப் போராளிகளுக்கும் கற்றுக்கொடுங்கள். பசுவுக்கு சுத்தத்தைக் கற்றுத் தரவேண்டாம். பன்றிகளுக்குக் கற்றுக் கொடுங்கள்; சிற்பிக்குக் கலை கற்றுத் தரவேண்டாம். அம்மி கொத்துபவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். நாகரிக மனிதருக்கு நவீனத்துவத்தை கற்றுத் தரவேண்டாம். காட்டுமிராண்டிகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.



