கோவை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி மற்றும் சென்னை அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் சார்பில், சர்வதேச குறும்பட விழா நடக்கிறது. ஜி.ஆர்.டி., கல்லுாரி அரங்கில், இன்று துவங்கும் இந்த விழா, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. விழா இயக்குனர் சாந்திவிஜயா கூறுகையில், ”மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவில், சர்வதேச குறும்பட விழாக்களில் விருது பெற்ற பல குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. ஊடகவியல் பயிலும் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. எதிர்காலத்தில் இவர்கள் சிறந்த இயக்குனர்களாக வளர இந்த விழா பயன்படும்,” என்றார்.சென்னை சர்வதேச குறும்பட விழா தலைவர் கண்ணன், துணைத்தலைவர் சந்தானம், இயக்குனர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைக்கின்றனர். பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.




