[image: pon-radhakrishnan.jpg] சென்னை: முட்டை கொள்முதலில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக, தமிழக அரசு மீது நான் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், முட்டை ஊழல் குறித்து கேட்டபோது, தமிழகம் மொட்டைபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மட்டுமே தாம் கூறியதாகச் சொன்னார்.
ஊழல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், பாஜக தலைவர் அமித்ஷா கூறிய கருத்துகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பாமக கூறியுள்ளது குறித்துச் சொன்னபோது, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு ஏற்படும் என்று பதில் கூறினார்.
முட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
Popular Categories



