திருநெல்வேலி: தாமிரபரணி மகாபுஷ்கரம் இப்போது சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக வரும் ஆன்மிக நிகழ்வு என்றால் பெரிதாக செய்திகளில் இடம்பெறாது. ஆனால், புஷ்கரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ, கிறிஸ்துவ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையால் ஊடக வெளிச்சம் படர்ந்தது புஷ்கரத்துக்கு!
அடுத்த பரபரப்பு கிளப்பி, மேலும் சூடுபிடித்துள்ளது புஷ்கரம். காரணமாக அமைந்தவர் கலெக்டர் பெயரில் சுற்றறிக்கை அனுப்பிய பரஞ்சோதி! நெல்லை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்!
இதை அடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர் அறநிலையத்துறை அதிகாரிகள். ஆட்சியர் பெயர் சுற்றறிக்கையில் இடம் பெற்றதால், விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்சியரும் தள்ளப் பட்டுள்ளார். அவரது விளக்கத்தின் படி, நீர்ச் சுழல் இருக்கும், நெல்லை மாநகராட்சி எல்லையில் வரும் இரு படித்துறைகளான குறுக்குத்துறை, சிஎன் கிராமம் தைப்பூச மண்டபம் இரண்டு நீங்கலாக மற்ற படித்துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சி.என்.கிராமத்தின் அருகே ஜங்ஷன் கைலாசநாதர் கோவில் பகுதியைச் சார்ந்த தைப்பூச மண்டபத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத் துறையைக் கண்டித்து பூட்டை உடைத்தெறியும் போராட்டம் என ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது இந்து முன்னணி அமைப்பு.
செப்.21 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் தைப்பூச மண்டப பூட்டை உடைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்து முன்னணி.
இப்போது நெல்லை புஷ்கர விழா மேலும் சூடு பிடித்துள்ளது. இத்தனை தடைகளைக் கடந்துதான் புஷ்கர விழா நடந்தது என்றால் அது வரலாற்றில் இடம் பிடித்ததாகி விடும்!





அறநிலைதà¯à®±à¯ˆà®¯à®¿à®©à¯ அநியாய அவலஙà¯à®•ள௠அகà¯à®•ிரமஙà¯à®•ள௠களைதெறிநà¯à®¤à¯ அறம௠காகà¯à®• அலைகடலென திரளà¯à®µà¯‹à®®à¯ !! நமà¯à®®à¯ˆ ஆளà¯à®®à¯ ஆணà¯à®Ÿà®µà¯à®©à¯à®•à¯à®•ாவà¯à®®à¯, நமà¯à®®à¯ˆ வாழ வைகà¯à®• அவன௠தநà¯à®¤à®°à¯à®³à®¿à®¯ வாழà¯à®•à¯à®•ை à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®®à¯ இநà¯à®¤à¯ மத உணரà¯à®µà¯à®ªà¯‚à®°à¯à®µà®®à®¾à®© போராடà¯à®Ÿà®®à¯, !! ஆலய மீடà¯à®ªà¯ போராடà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ எழà¯à®šà¯à®šà®¿à®¯à®¾à®• தொடரடà¯à®Ÿà¯à®®à¯ !!