பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

ஜல்லிக்கட்டு அனுமதி   பிரதமருக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கடிதம்

 அவர் எழுதிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாப்படுகின்ற ஒரு வீரவிளையாட்டாகும். இந்த
விளையாட்டு அறுவடை மற்றும் பண்டிகை காலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த
விளையாட்டில் பங்குபெறும் காளைகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்த
படுவதில்லை அவற்றிற்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசும்
உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதோடு இந்த வீரவிளையாட்டுகளில் பங்குபெறும்
காளைகளின் உரிமையாளர்கள் அதிக அளவு பணம் செலவு செய்து அதை பராமரிப்பதோடு,
முறையான பயிற்சியும் கொடுத்துவருகிறார்கள். நீண்ட நெடுங்காலமாக
வரலாற்று பின்னணியோடு, தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டோடு கலந்த இந்த
வீரவிளையாட்டை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டுள்ளார்