Homeஜோதிடம்மாசி மாதத்தில் பிறந்தவர்களா.. குணநலன்கள்..!

மாசி மாதத்தில் பிறந்தவர்களா.. குணநலன்கள்..!

astrology - Dhinasari Tamil

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள்.

குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள்.

காரியங்களை திட்டம் போட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத காரியங்களை சாதுர்யமாக முடித்து காட்டுவார்கள்.

இவர்கள் கௌரவம் பார்க்க வேண்டிய இடங்களில் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை அவர்களின் முகத்தை வைத்தே அறிந்து கொள்வார்கள்.

இவர்கள் சூழ்நிலைக் ஏற்றார்போல நடந்து கொள்வார்கள். கலை ஆர்வமும், சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடும் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மனஉறுதியும், தெளிவான பார்வையும் கொண்டவர்களாதலால் இயற்கையாகவே மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் நெருங்கி பழகுவர்.

இவர்களுக்கு நெருக்கமானவர்கள் எதை சொன்னாலும், செய்தாலும் தாங்கிக் கொள்வர். குடும்ப விவகாரங்களில் இவர்களுக்கு ஒரு பிடிப்பு இருக்காது.

விரக்தியான மனோபாவமும், தியாக உணர்ச்சியும் இவர்களுடைய இயற்கையான சுபாவங்களாகும்.
இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உயர்ந்த அந்தஸ்து, சேவை, தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை வேண்டாம் என புறக்கணித்து அதிலிருந்து வெளியேறுவார்கள்.

சொல் ஒன்று, செயல் ஒன்று என்பது இவர்களிடம் அறவே இருக்காது. இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடலாம். இவருடைய திட்டங்களுக்கும், செயல்களுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது.

இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவர்கள்.
இவர்கள் முன்கோபக்காரர்கள்.

இவர்களிடம் மன உறுதி அதிகம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. சிலசமயம் மனதில் சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் உருவானாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியத்தை சாதித்து கொள்வார்கள்.

எந்த வேலை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியத்தை செய்யக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள்.

இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள், மற்றும் உறவினர்களை பெற்றிருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிவிடுவதால் இவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் இருக்காது.

இவர்களுக்கு பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள் தானாக வந்தடையும். சுக்கிரன் இவர்களுக்கு யோகமாக அமைந்துவிட்டால் லட்சுமி யோகம் உண்டு. புதனும், செவ்வாயும் சாதகமாக இருக்க பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு சுகபோக பாக்கியங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் புத்திசாலித்தனமும், ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும்.

மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு, சொத்து சேரும் யோகம் பல வகைகளில் ஏற்படும். தாய்வழி உறவுகள் மூலம் சொத்துகள் கிடைக்கும்.

மாமா வகை உறவுகள் மூலமும், பெண்கள் மூலமும் உயில் அடிப்படையில் சொத்துகள் கிடைக்கும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளில் வசிப்பதற்கும், பிளாட் போன்ற அடுக்குமாடி வீடுகளில் இருந்து வருமானங்கள் வருவதற்கும் இவர்களுக்கு யோகம் உள்ளது.

நோய் இவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமானால் குறைவது மிகவும் கடினம். நரம்பு, கண் தொடர்பான கோளாறுகள் இருக்கும். சைனஸ், தலைபாரம், வாதம், நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் மூலம் அடிக்கடி அவதிப்பட நேரிடும்.

மனைவி இவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி பயணங்களில் கழியும். நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்வதை அதிகம் விரும்புவார்கள்.

மனைவி வகையில் இவர்களுக்கு சாதகம், பாதகம் இரண்டும் உள்ளது. குடும்ப விடயங்களில் இவர்கள் பிடிவாதமாக இருப்பது இரண்டு பேருக்கும் அடிக்கடி மனக்கசப்புக்கள் வந்து நீங்கும்.

சிலருக்கு நல்ல நிர்வாகத் திறமும், மதியூகமும் கொண்ட மனைவி அமைவார்கள். மனைவி மூலம் பேரும், புகழும், செல்வமும் வந்து சேரும்.

இவர்களுக்கு ஆண், பெண், குழந்தை வாரிசுகள் இருந்தாலும், பெண் குழந்தைகள் மூலம் யோகமும், செல்வாக்கும் கிடைக்கும்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெருமாளையும், காளியையும் வணங்கி வந்தால் இவர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,861FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...