ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது ? : பொதுமக்கள் குமுறல்

 
 
பொது மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது  ? என திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.
 
வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று பலர் அந்த அந்த மாவட்ட நிர்வாகத்திடம் இலவசமாக வழங்கி மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
 
தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க கொடுக்கும் பொது மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீது திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஓட்டி அயோக்கியதனம் செய்து வருவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
இந்த நிலையில் மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.